#Breaking:4 மாநிலங்கள் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை – தமிழக அரசு திட்டவட்டம்.!

4 மாநிலங்கள் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை பற்றி காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில்,மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13 வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக நடைபெற்று வருகிறது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லி சேவா பவனில் நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில்,4 மாநிலங்கள் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை பற்றி விவாதிக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025