#BREAKING: ஆபரேஷன் கஞ்சா வேட்டை – 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது! காவல்துறை அதிரடி நடவடிக்கை!

ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்து தமிழக காவல்துறை நடவடிக்கை.
தமிழகம் முழுவதும் கடந்த 31 நாட்களில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ன் கீழ் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்று,
6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 449 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் கூறியுள்ளது.
திண்டுக்கல், மதுரை, தேனியில் கைதான கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கிய காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கஞ்சா பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்களின் வங்கி கணக்கு, சொத்துக்களை முடக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025