#BREAKING: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றம்!.. வேந்தராக முதல்வர்!

சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் இருப்பார் என சட்டப்பேரவையில் அறிவிப்பு.
முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் முக ஸ்டாலினும், இணை வேந்தராக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்து வரும் நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவில் மாற்றம் செய்யபட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகே அமைக்கப்பட உள்ளது. இதற்கான துணை வேந்தர், மற்ற பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் வரும் காலங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த
தமிழக அரசின் சட்டப்பேரவை செயலகம் மூலமாக, சட்டத்துறை இந்த மசோதாக்களான கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று. இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 15க்கும் மேற்பட்ட சட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கும்போது, இன்று சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025