#BREAKING: மேலும் 2 தொகுதிகளில் ஓபிஎஸ் தரப்பு போட்டி – வேட்பாளர்கள் அறிவிப்பு

கர்நாடகா தேர்தலில் கோலார் தங்கவயல், காந்தி நகர் தொகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு போட்டி என அறிவிப்பு.

கர்நாடகா தேர்தலில் கோலார் தங்கவயல், காந்தி நகர் தொகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு போட்டி என அறிவிப்பு.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்த மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசன் போட்டியிடுகிறார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, இன்று இபிஎஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்ட அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் நெடுஞ்செழியன் என்பவரை வேட்பாளராக அறிவித்தனர்.

இது ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகிய இருவருக்கு இடையே நேருக்கு நேருக்கு மோதலாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பி.எஸ். தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், தமிழர்கள் அதிகமுள்ள மேலும் 2 தொகுதிகளிள் வேட்பாளர்களை களமிறக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் மேலும் 2 தொகுதிகளுக்கு ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ், காந்தி நகர் தொகுதியில் குமார் என்பவர் போட்டியிடுகிறார். ஏற்கனவே, புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக நெடுஞ்செழியன் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 3 தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் போட்டியிடுகின்றனர்.

unknown node