பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத 3,56,186 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.
பி.எம்.கிசான் பயனாளிகள் 13ஆவது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை அறிவித்துள்ளார். இதுவரை 12 தவணை உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், அடுத்த தவணை தொகையை பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பி.எம்.கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கபடுகிறது. இந்த நிலையில், பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத 3,56,186 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு திட்டங்களை பெறுவதற்கு ஆதார் முக்கியம் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பி.எம்.கிசான் திட்டத்துக்கும் ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.