#BREAKING: ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!

Issuance of police look-out notices to all airports to prevent Rajendra Balaji from escaping abroad.

ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கு போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீஸ் தேடி வருகிறது.

இந்த நிலையில், பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க இந்திய முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது காவல்துறை.