#BREAKING: ஏப்.2ல் பிரதமர், முதல்வர், துணை முதல்வர் ஒரே மேடையில் பரப்புரை.!
ஏப்ரல் 2ம் தேதி மதுரையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு.
ஏப்ரல் 2ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்கின்றனர். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, ஏப்ரல் 2ம் தேதி சேலத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், மதுரையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.