10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது.
கடந்த மார்ச் 13-ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்ற நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்த பொது தேர்வினை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் 37,798 தனித்தேர்வர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர், மற்றும் 2,640 சிறை கைதிகள், 13,151 மாற்றுத் திறனாளிகள் ஆகியோ எழுதுகின்றனர்.
அதன்படி, இன்று ஏப்ரல் 6- தமிழ் (மொழிப்பாடம் ), ஏப்ரல் 10 – ஆங்கிலம், ஏப்ரல் 13- கணிதம், ஏப்ரல் 15- விருப்ப மொழி பாடம், ஏப்ரல் 17- அறிவியல், ஏப்ரல் 20- சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன.