#BREAKING: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை.!

Rajinikanth warns Lok Sabha district secretaries that they will be fired if they receive money to appoint booth committee members.

பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க பணம் பெற்றால் நீக்கபடுவார்கள் என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கவுள்ளார். அதற்கான அறிவிப்பு வரும் 31-ஆம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். புதிதாக தொடங்கவுள்ள கட்சிக்கு மேற்பார்வையாளர் தமிழருவி மணியனும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆயோரை நியமனம் செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சி பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், வரும் 25-ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும்போது பணம்பெறக்கூடாது என்றும் அப்படி பணம் பெற்றால் நீக்கப்படுவார்கள் எனவும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.