#BREAKING: 21 மீனவர்களை உடனே விடுவித்திடுக – முதலமைச்சர் மு.க ஸ்டலின் கடிதம்!

Chief Minister's letter urges concrete action to find a permanent solution to the long standing problem of Indo-Sri Lankan fishermen.

இந்திய – இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உறுதியான நடவடிக்கை தேவை என முதலமைச்சர் கடிதம்.

இலங்கை கடற்படை கைது செய்த 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 3 சம்பவங்களில், 68 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு சமீபத்தில் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பக் காத்திருக்கிறார்கள். நீண்ட நாட்களாக அவர்கள் சிறையில் இருப்பது, அவர்களது குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள இந்த நீண்டகாலப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க, உறுதியான வழிமுறைகளைப் பின்பற்றிட கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

unknown node