#Breaking : சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு! கைது செய்யப்பட்டிருந்த காவலர் பால்துரை உயிரிழப்பு!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த காவலர் பால்துரை உயிரிழப்பு.
கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சாத்தான்குளம் பகுதியில் தந்தை-மகன் இருவரும் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை அவர்களுக்கு கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இவருக்கு நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளும் இருந்து வந்த நிலையில், தற்போது காவலர் பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.