#Breaking:கல்வி உதவித்தொகையில் முறைகேடு – 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!

#Breaking: Scholarship abuse - 52 college principals summoned!

பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் பாலிடெக்னிக்,பொறியியல் கல்லூரிகள் உட்பட 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

2011 – 2014 ஆம் ஆண்டு வரை எஸ்.சி.,எஸ்.டி. உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் ரூ.17.36 கோடி முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னதாக வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில்,பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் பாலிடெக்னிக்,பொறியியல் கல்லூரிகள் உட்பட 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.அதன்படி,52 கல்லூரி முதல்வர்களும் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.