BREAKING: கல்விக்கட்டணத்தை செலுத்த கட்டாயபடுத்தக்கூடாது.! தமிழக அரசு.!

பள்ளி, கல்லூரிகள் 2020-21ஆம் ஆண்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டுமென பெற்றோரை கட்டாயபடுத்தக்கூடாது என தமிழக அரசு கூறியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் 2020-21ஆம் ஆண்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டுமென பெற்றோரை கட்டாயபடுத்தக்கூடாது என தமிழக அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக உள்ளது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையததால் மேலும் 19 நாள்களுக்கு ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தது.

இந்த, ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.இதனால் பொதுமக்களின் வாழ்வாதரம் இழந்து தவித்து வருகின்றனர். இதன்காரணமாக மத்திய அரசு சில சலுகைகளை அளித்து வருகிறது.

மேலும், மாநில அரசுகளும் தங்களின் மாநில நிலைமையை பொறுத்து பொதுமக்களுக்கு சலுகைகளை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு  கால காலத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள் 2020-21ஆம் ஆண்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டுமென மாணவர்களின் பெற்றோரை கட்டாயபடுத்தக்கூடாது என தமிழக அரசு கூறியுள்ளது.

unknown nodeunknown node