#BREAKING: தென் கொரியர்கள் தப்பிய வழக்கு – சிபிஐ விசாரிக்க உத்தரவு!

The High Court has ordered the transfer of the case of two South Koreans involved in the GST scam to the CBI.

ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட தென் கொரிய நாட்டினர் 2 பேர் தப்பிய வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜிஎஸ்டி மோசடி வழக்கில் வீட்டு காவலில் இருந்த 2 தென் கொரியர்கள் தப்பிய வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீ பெரம்பத்தூரில் உள்ள நிறுவனத்தை சேர்ந்த இரு தென் கொரியர்கள் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக வீட்டு காவலில் அடைக்கப்பட்டியிருந்தனர்.

வீட்டு காவலில் இருந்த இரு தென் கொரியர்களும் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு தப்பி சென்றனர். ஜிஎஸ்டி வாரியாக வாடிக்கையாளர்களிடம் வசூலித்த ரூ.40.37 கோடியை செலுத்தாமல் மோசடி செய்தாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட தென் கொரிய நாட்டினர் 2 பேர் தப்பிய வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.