நாகை வேதாரண்யத்தில் நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். கத்தி, கம்பு உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 5 மீனவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
சிவலிங்கம், துரை, காளியப்பன், குப்புசாமி, தனபால் ஆகிய ஐந்து மீனவர்கள் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். ஐந்து படங்களில் சென்ற இருபது மீனவர்களை இலங்கை கொள்ளையர்கள் விரட்டியடித்துள்ளனர். தமிழக மீனவர்களிடம் இருந்து, ஜிபிஎஸ் கருவி, மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றை பறித்து சென்றதாகவும் புகார் அளித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, கடலோர காவல் குழும போலீசார், மின்வளத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
