பெட்ரோல், டீசலை நியாயமான விலையில் வழங்குவது மத்திய அரசின் கடமை” -நிதியமைச்சர் பிடிஆர்..!

#Breaking: Tamil Nadu budget session begins ..!

பெட்ரோல், டீசலை நியாயமான விலையில் வழங்குவது மத்திய அரசின் கடமை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

இதற்கிடையில்,அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்ட நிலையில் அனுமதி கிடைக்காததால் பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

இதனையடுத்து,தாக்கல் செய்து வரும் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:” 2014ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ. 10.35 ஆக இருந்தது. ஆனால்,தற்போது பெட்ரோல் மீதான வரி ரூ. 32.9ஆகவும் டீசல் மீதான வரி ரூ. 3.57ல் இருந்து ரூ. 31.8ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

20-21ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாய் 63% அதிகரித்துள்ளது.இதனால்,மாநிலங்களின் பங்கு கடுமையாகச் சரிந்துள்ளது. ஆகவே எரிபொருள் மீதான விலையைக் குறைக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கே இருக்கிறது.

எனவே,பெட்ரோல், டீசலை நியாயமான விலையில் வழங்குவது மத்திய அரசின் கடமை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.