#Breaking:வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் தடை தொடரும் – மருத்துவத்துறை அறிவிப்பு..!

#Breaking: The ban will continue on Friday, Saturday and Sunday - Medical announcement ..!

கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டிற்கு தடை தொடரும் என்று மருத்துவத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும், வேலை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி,50 % பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும்.பள்ளிகள் திறந்து ஒருவாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டுத்தளம் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கோயில்கள்,தேவாலயங்கள் மசூதிகள் திறப்பு குறித்து மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.