ஆருத்ராவில் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு 6 மாதத்தில் பணம் திரும்பி அளிக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தகவல்
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஆருத்ரா மோசடி
இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி உள்ளிட்ட சிலரை கைது செய்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
unknown nodeஇதனையடுத்து, ஆர்.கே.சுரேஷின் வீட்டிற்கு போலீசார் விசாரணைக்காக சென்ற போது அவர் வீட்டில் இல்லாததால், போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கிடையில், மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசிஅம்மாள் தலைமையில் மாவட்ட அளவில் 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றுஆருத்ராநிதி நிறுவன பண மோசடி விவகாரத்தில், செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.ஆருத்ராபண மோசடி வழக்கில் இதுவரை 13 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். முடக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட சொத்துக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ₹6 கோடி பணம், 4 கிலோ தங்க நகைகள், 130 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆருத்ராவில் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு 6 மாதத்தில் பணம் திரும்பி அளிக்கப்படும் வாய்ப்புள்ளது என்றும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர் .