#BREAKING: வாக்காளர் பட்டியல் விவகாரம் – தலைமை தேர்தல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு.!

A case has been filed in the Madurai branch of the High Court seeking annulment of the voter list published on January 20.

ஜனவரி 20ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை ரத்து செய்து திருத்தங்களை மேற்கொள்ள கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு.

ஜனவரி 20ல் வெளியான வாக்காளர் பட்டியலை ரத்து செய்து, புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட கோருவது குறித்து பதில் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி 20ல் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கவும், வாக்காளர்களின் பெயர்கள் இருமுறை இருப்பதாகவும் கூறி தென்காசி சைலப்பா கல்யாண் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.