#Breaking:தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி,கோவை,தேனி,திண்டுக்கல்,திருப்பூர்,ஈரோடு,சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி,நாமக்கல்,கரூர்,திருச்சி,பெரம்பலூர்,திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர்,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

unknown node

மேலும்,நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை:

unknown node

வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

unknown node

இன்று முதல் நான்கு நாட்களுக்கு,தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா,குமரிக்கடல் பகுதி,கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள்,மத்திய கிழக்கு அரபிக்கடல்,இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

#Breaking:தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு!