பாம்பனில் இருந்து 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது  புரேவி புயல்.!

Burevi Cyclone was moving at a speed of 14 kmph and it is 110 km from Pamban, according to the Meteorological Department..

புரேவி புயலானது தற்போது பாம்பனில் இருந்து 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து இன்று இரவு அல்லது நாளை காலை பாம்பன் – குமரி இடையே புரேவி புயல் கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் தற்போது புரேவி புயல் தற்பொழுது பாம்பனில் இருந்து 110 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகரும் இந்த புயல் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் 70-90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புரேவி புயல் மன்னார் வளைகுடாவை அடுத்த 3 மணி நேரத்தில் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.