இன்று முதல் இந்த 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி…!

இன்று முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளுடன், ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, இன்று முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025