இடைத்தேர்தல் – காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் வேட்பாளர்கள் மனு ஏற்பு!

வேட்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

வேட்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தலில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 70க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று வேட்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

இதுபோன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதிமுகவில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு வேட்புமனுவும் ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும். பிப்ரவரி 10ம் தேதி அன்றே பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.