தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இந்த கூட்டத்தில் மருத்துவர்கள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதியோடு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீடிப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வந்துள்ளது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.