முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடக்கிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. அதன்படி, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
மார்ச் 9-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்க உள்ளனர். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவை எப்போது? என்பது குறித்து சபாநாயகர் இன்று மாலை அறிவிக்கிறார். தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை, மார்ச் 3வது வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.