போலி பத்திரம் ரத்து – தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு!

போலி பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு.

போலி பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு.

போலி பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு தந்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி, நாட்டில் முதல்முறையாக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு அரசு அரசு எனவும் பாராட்டப்பட்டுள்ளது.

unknown node

சென்னை துரைப்பாக்கத்தில் சலபதிக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் மனையை போலி பத்திரம் தயாரித்து சிலர் விற்றுள்ளனர். பத்திரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை  தெற்கு மாவட்ட பதிவாளரிடம் அவரது வாரிசுகள்  அளித்துள்ளனர். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் சலபதியின் மகன் சுதாகரராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

unknown node

மனுதாரரின் புகார் குறித்து 8 வாரத்தில்  எடுக்க மாவட்ட பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, இந்த வழக்கு விசாரணையின்போது, போலி பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு தந்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போலி பத்திரம் ரத்து செய்யும் நடைமுறையை முதலமைச்சர் சமீபத்தில் தொடங்கி வைத்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

போலி பத்திரம் ரத்து – தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு!