#Election Breaking: வெளியானது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல்!

The list of candidates of the Communist Party of India contesting in the DMK alliance in the Assembly elections has been released.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருத்துறைபூண்டி, தளி, திருப்பூர் வடக்கு, பவானிசாகர், வால்பாறை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். அதன்படி,

1. திருத்துறைபூண்டி – மாரிமுத்து

2. தளி – ராமச்சந்திரன்

3. திருப்பூர் வடக்கு – ரவி (எ) சுப்பிரமணியன்

4. பவானிசாகர் – சுந்தரம்

5. வால்பாறை – ஆறுமுகம்

6. சிவகங்கை – குணசேகரன்