சீமான் மீது செங்கல்பட்டு நகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து காட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, செங்கல்பட்டு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கி.சஞ்சீவி நாதனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் போலீசார் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்காத நிலையில், சீமான் தொடர்ந்து பேச முயன்றுள்ளார். இதனால் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட மின்விளக்குகள், ஒலிபெருக்கிகள் ஆகியவற்றிற்கு கொடுக்கப்பட்டிருந்த மின்இணைப்பு காவல்துறையினர் துண்டித்துள்ளனர். இதனையடுத்து, சீமான் மீது செங்கல்பட்டு நகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…