கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதற்காக பிரேமலதா மீது வழக்கு பதிவு...!

Hosur police have registered a case against Premalatha Vijayakand for staging a protest in Hosur in violation of corona prevention rules.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டம் ஓசூரில் நடத்தியதற்காக பிரேமலதா விஜயகாந்த் மீது ஒசூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி நேற்று பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் ஓசூரில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது டிராக்டரில் ஊர்வலமாக வந்த பிரேமலதா அதன் பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, முழக்கங்களை எழுப்பினார்.

இந்நிலையில் ஓசூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது ஓசூர் போலீசார் தற்பொழுது  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.