7.5 % இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு…!

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வின் முன்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இந்த வழக்கில் விரிவாக வாதிட கால அவகாசம் வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, விரிவான விசாரணைக்காக வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025