மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த முறை 13 கேள்விகள்... என்ன அந்த கேள்விகள் ... உங்களுக்காக இதோ உள்ளே...

நடப்பு 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே

நடப்பு 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே  அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில், ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளது அதில், ‘‘அனைவரிடம் இருந்தும் 31 கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.அந்த கேள்விகள்,

1. கட்டட எண்2. சென்சஸ் வீட்டு எண்3. தரை, சுற்றுச்சுவர், கூரை விவரம்.4. எதற்காக வீடு பயன்படுத்தப்படுகிறது.5. வீட்டின் நிலை6. குடும்ப எண்.7. குடும்பத்தின் மொத்த உறுப்பினர்கள்.8. குடும்பத் தலைவரின் பெயர்9. குடும்பத்தலைவரின் பாலினம்.10. குடும்பத் தலைவர் எஸ்சி/எஸ்டி அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா?11. சொந்த வீடா? வாடகை வீடா.12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை13. வீட்டில் திருமணமான ஜோடிகளின் எண்ணிக்கை.14. குடிநீரின் ஆதாரம்.15. எந்த வகையில் குடிநீர் பெறப்படுகிறது.16. வீட்டில் மின் இணைப்பு உள்ளதா இல்லையா?17. வீட்டில் கழிவறை உள்ளதா?18. கழிவறையின் வகை என்ன?19. கழிவு நீர் அகற்றும் வசதி உள்ளதா?20. குளியல் அறை உள்ளதா?21. சமையல் அறை மற்றும் சமையல் எரிவாயு உள்ளதா?22. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன?23. ரேடியா, டிரான்சிஸ்டர் உள்ளதா?24. டிவி உள்ளதா?25. இன்டர்நெட் வசதி இருக்கிறதா?26. லேப்டாப்/கம்ப்யூட்டர் இருக்கிறதா?27. தொலைபேசி/செல்போன்/ஸ்மார்ட் போன் உள்ளதா?28. சைக்கிள்/ஸ்கூட்டர்/பைக்/மொபட் உள்ளதா?29. கார்/ஜீப்/வேன் உள்ளதா?30. குடும்ப உறுப்பினர்கள் அதிகம் சாப்பிடும் பருப்பு வகை என்ன?31. செல்போன் எண். ஆகிய 31 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து மக்கள் தொகை பதிவேட்டுக்கான(என்பிஆர்) விவரங்களை சேகரிக்கும் பணியும்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.