கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும்- முதல்வர் பழனிசாமி கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர்  பழனிசாமியுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர்  பழனிசாமியுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் செயற்கை சுவாச கருவிகள், என்.95 மாஸ்கள் வாங்க ஏற்கனவே தமிழக அரசு கோரியுள்ள 9 ஆயிரம் கோடியோடு சேர்த்து கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று  பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கோரிய ₹9000 கோடியும் உடனே வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியிறுத்தியுள்ளார்.