சென்னை வந்தது மத்திய குழு! சுகாதாரத்துறை அமைச்சருடன் இன்றுஆலோசனை !

Default Image

சென்னை வந்தது மத்திய குழு, சுகாதாரத்துறை அமைச்சருடன் இன்றுஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, தமிழகம் உள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு, தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக அனுப்பியுள்ளது.

சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட 7 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த மத்திய ஆய்வு குழு தலைவர் ஆர்த்தி அகுஜா, மிண்ணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரா ஆகியோர் ஆய்வு செய்வதற்காக செங்கல்பட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.  இந்த குழு நாளை வரை தங்கி சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவமனைகள், கட்டுப்பாட்டு பகுதிகளை நேரில் பார்வையிடுகின்றனர்.

மேலும், இந்த குழு இன்று காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai