#BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!

The Meteorological Department has forecast heavy rains in 8 districts in Tamil Nadu.

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் இடியுடன் இன்று கனமழை பெய்யும். வட மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோட்டில் நாளை இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை யில் சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.