5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

The Chennai Meteorological Department has forecast heavy rains for 5 days in Tamil Nadu

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் புதுக்கோட்டை, ராமநாதபுரம் , தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, தர்மபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.