தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ....!

The Chennai Meteorological Department has forecast moderate rains in 9 districts in Tamil Nadu.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே அடுத்த மூன்று மணி நேரத்துக்கு ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.