தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!

The Chennai Meteorological Department has forecast 4 days of rain in Tamil Nadu.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகும்காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம்,கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்குவாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானமழைக்குவாய்ப்பு,நீலகிரி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.