தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

According to the Meteorological Department, there is a possibility of rain in 8 districts of Tamil Nadu due to overcast skies.

வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

குமரிக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கைக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தமிழகத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.