சென்னை நகைக்கடை கொள்ளை – கொள்ளையனின் புகைப்படம் வெளியீடு..!

சென்னை பெரம்பூரில் இயங்கி வந்த தனியார் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையனின் புகைப்படம் வெளியீடு

சென்னை பெரம்பூரில் இயங்கி வந்த தனியார் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையனின் புகைப்படம் வெளியீடு

கடந்த 10-ஆம் தேதி, சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ஓர் தனியார் நகைக்கடையில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் முதலில் வெல்டிங் மிஷின் கொண்டு கடையின் கதவை துளையிட்டு நகை வைக்கப்பட்டு இருக்கும் அந்த பெட்டகத்தையும் வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகளையும், 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்களையும் திருடி சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், 17 நாட்கள் ஆகியும் கொள்ளையனை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதனையடுத்து, தற்போது போலீசார் பெரம்பூரில் இயங்கி வரும் ஓர் தனியார் நகைக்கடையில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.