சென்னை காவல் ஆணையர் இடமாற்றம்.! தமிழக அரசு திடீர் உத்தரவு.! 

Sandeep Rai Rathore IPS

சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையராக கடந்த ஓராண்டாக பொறுப்பில் இருந்து வந்த சந்தீப் ராய் ரத்தோரை தற்போது இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அருண் ஐபிஎஸ் முன்னதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பில் இருந்து வந்தார். சந்தீப் ராய் ரத்தோர் தற்போது காவல்துறை பயிற்சித்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல, புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சட்டம் ஒழுங்கு மீது தங்கள் கண்டங்களை பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்