ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.மேலும் அந்த ஜாமீனில் அவருக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.வழக்கு தொடர்பாக அறிக்கை மற்றும் ஊடகங்களில் பேட்டியளிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த அவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் சிறையில் இருந்து வெளியே வந்த சிதம்பரத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சிதம்பரம்சந்தித்தார்.மேலும் சிதம்பரம் நாடாளுமன்றதிற்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்துள்ளார்.இதனால் சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர் .கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்டோர் ப.சிதம்பரத்தை வரவேற்றனர்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…