அமித் ஷாவிற்கு சிலையை பரிசளித்த முதல்வர், துணை முதல்வர்..!

Amit Shavi presented a statue of Chief Minister Edappadi Palanisamy Ganesha and a statue of Deputy Chief Minister O. Panneerselvam

தமிழகத்திற்கு இன்று 2 நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். மதியம் சென்னை விமான நிலையம் வந்த அமித் ஷாவிற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பலர் வரவேற்றனர்.

பின்பு மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல நலத்திட்டங்களை அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அதில்,  ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது, தமிழகத்திற்கு  பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். முதல்வரை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவிற்கு நடராஜர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.