முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மணிமண்டபத்தை திறந்து வைத்த முதல்வர் மற்றும் துணை முதல்வர்!

The Chief Minister and the Deputy Chief Minister have inaugurated the Mani Mandapam built for former Speaker BH Pandian.

நெல்லை கோவிந்த பேரில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.

நெல்லை கோவிந்த பேரில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். மண்டபத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளித்தனர்.

இந்த மண்டபத்தை திறந்து வைத்தபின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நெல்லை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் கிடைக்க போராடியவர் பி.எச்.பாண்டியன் என்றும், இது குறித்து பன்னீர்செல்வம் அவர்கள் கூறுகையில் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து கட்சியில் இருந்தவர் பி.எச்.பாண்டியன். மேலும், அவரது பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டு துணை முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.