எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் கண்டனம்.
சபாநாயகரை குற்றச்சாட்டி பேசுவது மரபல்ல என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.