அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை…!

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை துறை சார்ந்த செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த 13-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், முதல் நாளான அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் (ஆகஸ்ட்-14) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 23ஆம் தேதி ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்தார். 23 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரானது செப்டம்பர் 13-ஆம் தேதியன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை துறை சார்ந்த செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.