தமிழ்நாடு காவல்துறையின் 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 5 காவல் உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தற்போது காவல்துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கு ஏற்ப சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு காவல்துறையின் 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 5 காவல் உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க்-க்கு ரொக்க பரிசு இல்லாமல் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மா.குணசேகரன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் சார்பு ஆய்வாளர் சு,முருகன் மற்றும் முதல் நிலை காவலர் ரா,குமார் ஆகியோருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
unknown node