நாளை இரவு பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, நாளை பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர்.

MK Stalin

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, நாளை பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர்.

கர்நாடக மாநில புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரையும் கட்சி தலைமை தேர்ந்தெடுத்து அறிவித்திருந்தது. அதன்படி, பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் நாளை மறுநாள் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இந்த சமயத்தில், பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சித்தராமையா தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, நாளை பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை இரவு பெங்களூரு செல்கிறார். நாளை மாலை பெங்களூரு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை மறுதினம் நடக்க உள்ள கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.