முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை...!

Chief Minister MK Stalin is consulting with all district collectors this morning via video on the implementation of the full curfew.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காலை 4 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, 24ம் தேதிக்கு பின், ஊரடங்கை நீடிப்பது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழுவினருடனும், சட்டமன்ற கட்சி குழுவுடனும் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.