கலைஞரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

MK Stalin's floral tribute to the artist's portrait in Kodambarkam, Chennai.

சென்னை கோடம்பார்க்கத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பிரபலங்கள் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, சென்னை கோடம்பார்க்கத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.