மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

Chief Minister demands release of 55 Tamil fishermen captured by the Sri Lankan Navy.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க கோரி முதலமைச்சர் கோரிக்கை.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 55 பேரை சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படை, 8 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படை செயலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொலைப்பேசியில் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மீனவர்கள், 8 படகுகளை விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.